Thursday, 14 February 2013

வாலென்டைன்ஸ் டேயும்... எனது விமானப் பயனமும்....


வாலென்டைன்ஸ் டேயும்... எனது விமானப் பயனமும்....



ஃபிப்ரவரி 14, 2009-ஆம் ஆண்டு புனேயிலிருந்து மும்பை வரை டொயோட்டா குவாலிஸில் பயனம் செய்து...

மும்பையிலிருந்து சென்னைக்கு ஒரு தனியார் விமானத்தில் (பெயர் வேண்டாம்) சென்னைக்கு மூன்று பேர் கொண்ட குழுவாகப் பயணம் செய்தோம்...

ஒரு தள்ளுவண்டியில் தண்ணீர், சாண்ட்விச், மற்றும் ஏதேதோ உணவுப் பொருட்களை விற்றுக்கொண்டு இரு அழகிய ஏர் ஹோஸ்டஸ் பெண்கள் சென்றனர்....

தண்ணீர் கூட பணம் கொடுத்து வாங்க வேண்டிய அவ்விமானத்தில்...

கடுப்புடன் கூடிய பயணம்....

அப்பொழுதுதான் ஒரு சிறிய நகைச்சுவை....

அடுத்த பத்து நிமிடங்களில் மீண்டும் ஒரு தள்ளுவண்டி...
இப்பொழுது உணவுப் பொருட்கள் அல்ல... பரிசுப்பொருட்கள்...

விமானப் பணிப்பெண்கள் கோரிய வசனம்...

"டூ யு வான்ட் டூ பை எனி கிஃ ப்ட் டூ யுவர் வாலென்டைன் சார்..?"

(உங்களுடைய வாலென்டைனுக்கு ஏதேனும் பரிசுப் பொருட்கள் வாங்க வேண்டுமா...?)

அடப் பாவிகளா....? 

வாலென்டைன்ஸ் டே என்றால் காதலர் தினம் என்று கூறுவதால் 

வாலென்டைன் என்பது காதலன் அல்லது காதலியின் பொதுப் பெயர் என்று எண்ணிய அப்பெண்களின் அறியாமையை எண்ணி மனதுக்குள் சிரித்துக்கொண்டே வந்தேன்....

12 comments:

  1. There is nothing wrong in what they said. Significant others are called “Valentines”.

    ReplyDelete
  2. "Will you be my valentine?" என்று கூகுள் செய்து பாருங்கள்.

    ReplyDelete
    Replies
    1. பாத்துட்டேன்... இவ்வளவு நாளா எனக்குதான் தெரியல...
      அய்யோ... அய்யோ...

      Delete
  3. //வாலென்டைன் என்பது காதலன் அல்லது காதலியின் பொதுப் பெயர் என்று எண்ணிய அப்பெண்களின் அறியாமையை எண்ணி மனதுக்குள் சிரித்துக்கொண்டே வந்தேன்....//

    நல்லவேளை மனதுக்குள் சிரிச்சீங்க. வெளியே சிரிச்சு இருந்தால்.... மற்றவங்க 'உங்களைப் பார்த்து' சிரிச்சு இருப்பாங்க.

    வேர்டு வெரிஃபிகேஷனை தூக்கினால் நல்லது.

    ReplyDelete
    Replies
    1. உண்மையைக் கூறுவதென்றால் நான் ப்ளாக்க்கருக்குப் புதுசு...
      எப்புடியாவது கண்டு புடுச்சு வேர்ட் வெரிபிகேசன தூக்கிடுறேன்...

      மிக்க நன்றி...

      Delete
  4. ஹா ஹா.. விட்டால் low cost airlines நம்மளை நின்னுகிட்டே வரச் சொல்வாங்க!!

    ReplyDelete
  5. // வாலென்டைன் என்பது காதலன் அல்லது காதலியின் பொதுப் பெயர் என்று எண்ணிய அப்பெண்களின் அறியாமையை எண்ணி மனதுக்குள் சிரித்துக்கொண்டே வந்தேன்....//

    Valentine is a generic name for lady love. She was right.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி... இப்பொழுது எனது அறியாமையை எண்ணி சிரிக்கிறேன்... :)

      Delete
    2. அதில் ஒன்றும் தவறு இல்லை சார். ஒருமுறை கூகுளில் உள்ள ஒரு வசதியை தவறாக புரிந்து கொண்டு கூகுள் சொதப்புகிறது என்று நினைத்து பதிவிட்டேன்.

      பதிவுலக நண்பர்கள் தான் அதனை சுட்டிக் காட்டி எனக்கு விளங்க வைத்தார்கள்.

      Delete
    3. மிக்க நன்றி... SathyaPriyan...

      Delete