Wednesday, 1 May 2013


என்னத்த சொல்ல...

குப்பை உண்ணும் மான்கள்
(நாயைக் கூட சமாளித்துவிடலாம்…. ஆனால்…)




நான் ஏ.எல். முதலி இரண்டாம் வீதி, தமிழ்நாடு வீட்டு வசதிவாரியக் குடியிருப்புப் பகுதி (TNHB), வேளச்சேரி என்ற முகவரியுடைய வீட்டிற்குக் குடிவந்து ஏறக்குறைய 6 ஆண்டுகள் கடந்துவிட்டன.

பணி நிமித்தமாக வீட்டிற்குத் திரும்பும் நேரம் இரவு 10 மணிக்கு மேல் ஆகிவிட்டால்…
பேருந்து நிறுத்தத்தில் இருந்து சற்றே ஒரு வித பயத்துடன்தான் வீடு திரும்புவேன்.

அதற்கு இரு முக்கிய காரணங்கள்.

காரணம்-1:

அனைவரும் அறிந்த பொதுவான காரணம்தான்...
நாய்கள்  தொல்லை.... (சுமார் 20-30 நாய்கள்)

காரணம்-2:

மான்கள் தொல்லை.

இதனைப் பற்றி பல நண்பர்களிடம் கூறியபொழுதும் பலரும் நான் பொய் கூறுவதாகவே எண்ணுவதுண்டு…

அது அவர்கள் முகத்தில் தெரியும் அல்ட்சியப் புன்னகை மூலம் வெளிப்படும்…

ஆனால் நானும் அவர்களிடம் மேற்கொண்டு விவாதிப்பதில்லை…

ஒன்றை மட்டும் வினவுவது உண்டு….

ராஜ் பவன் சுவர் முடியுமிடத்தில், வேளச்சேரி பிரதான சாலையில் “மான்கள் குறுக்கிடும் இடம், மெதுவாகச் செல்லவும்” என ஓர் பலகையைக் கண்டுள்ளீர்களா என்பதே அது…

நாய்களை “தோத்தோ”அல்லது “ச்ச்ச்ச்ச“ என்று உச்சுக்கொட்டி அழைக்கலாம்… “ச்சூ ச்சூ” என்று கூறி விரட்டலாம் என்பதுவரை மட்டுமே அறிந்த எனக்கு…

மான்களை என்ன கூறி விரட்டுவது என்பது இதுவரை விளங்கவில்லை…

பகல் நேரத்தில் சாதுவாக அழகாகத் தோன்றும் மான்கள் இரவு நேரத்தில் கோபமுடன் துரத்துகையில் பயமேற்படுத்துவது சகஜமே…

இல்லை இது நேர்வது  எனக்குமட்டும்தானா என்று தெரியவில்லை…

என்னில் எழும் பய உணர்வு அலைகளால் ஏற்படும் விளைவா என்பதும் எனக்குத் தெரியவில்லை…

ஒன்றோ இரண்டோ என்றால் கூட பரவாயில்லை…. 15 முதல் 20 வரையிலான எண்ணிக்கையில்…

ராஜ்பவன் என்ற வனப்பகுதியில் இல்லாத எதனைத் தேடி ஊருக்குள் வந்து..
இந்த குப்பைகளுக்குள் கண்டு உண்கின்றன என்பதுதான் எனது வியப்பு இன்றுவரை…

வீட்டில் நல்ல உணவிருப்பினும்...
அரைவேக்காடாய் இருக்கும் ஃபாஸ்ட் ஃபுட் தேடி உண்ணும் வழக்கம்  நம்மிடமிருந்து அவற்றிற்கும் தொற்றிவிட்டதோ என்னவோ…

தெரியவில்லை…

கோழி (முட்டை அடைகாக்கும் சமயம்), நாய், தற்பொழுது மான் இவ்ற்றைக் கண்டெல்லாம் நான் பயப்படவேண்டியுள்ளது…

அதுதான் நகைச்சுவையே…

எது எப்படியாயினும் இரவு 10 மணிக்கு மேல் ஆகிவிட்டால் வீடு திரும்புகையில் ஏற்படும் பயம் மட்டும் அகலவில்லை…

என்றும் அன்புடன்,
சு.ஜெயக்குமார்

Wednesday, 10 April 2013

மாதவிடாய் – ஆவணப்படம் ஒரு பார்வை (நன்றி: www.aranthai.com )


இது எனது நண்பன் www.aranthai.com - இல் எழுதிய கட்டுரை....


மிகவும் முக்கியமான மாத்விடாய் என்ற இத்திரைப்படம் அனைவரிடமும் சென்றடைய வேண்டும் என்ற சீரிய நோக்கமுடன் இக்கட்டுரையைப் பகிர்ந்துகொள்கிறேன்...

நன்றி:  www.aranthai.com &  திசைகள் மாணவ வழிகாட்டு அமைப்பு, அறந்தாங்கி.



மாதவிடாய் – ஆவணப்படம் ஒரு பார்வை

திரைப்பார்வை & கட்டுரையாக்கம் : Dr. S.தெட்சிணாமூர்த்தி, மருத்துவ அலுவலர்,
                                 திசைகள் மாணவ வழிகாட்டு அமைப்பு,
                                 அறந்தாங்கி. www.aranthai.com

இயக்கம்: திருமதி. கீதா இளங்கோவன்
தயாரிப்பு: திரு. இளங்கோவன்

“மாதவிடாய்  - இது ஆண்களுக்கான பெண்களின் படமல்ல...
மனித குலத்திற்கேயான பெண்களின் படம்...
சத்யஜித்ரே, அகிரா குரோசேவா, பாலா இவர்களின் படைப்புகளை
வானவில், அருவி ஆகியவற்றோடு ஒப்பிட்டால்... 
“மாதவிடாய் என்ற இந்த ஆவணப்படமானது காற்று, நீர் போல
மனிதனின் அத்தியாவசியத்தேவை...
 உலகப் பொருளாதாரம், உலகப்போர்கள், உலகத் தலைவர்கள், தீவிரவாதம்,
காதல், குடும்ப உறவுகள் பற்றி பல ஆயிரக்கணக்கான திரைப்படங்கள்,
குறும்படங்கள் வந்திருந்தாலும், தாயாக, சகோதரியாக, மனைவியாக,
தோழியாக நம் வாழ்வின் பல பக்கங்களை தன் தாய்மையாலும், தோழமையாலும்
உயிர்ப்பாக வைத்திருக்கும், நம் உயிரின் சக ஜீவன்களான பெண்களின் மிக
முக்கியமான ஒர் இயற்கை நிகழ்வை இதுநாள்வரை நாம் கண்டுகொள்ளத் தவறி,
மாபெரும் தவறை இழைத்துவிட்டோமோ என்று நம் மனதை
உலுக்கிப் போட வைத்திருக்கிறது இந்த “மாதவிடாய்....

“மாசா மாச ரத்தப் போக்கு ஏலேலம்படி ஏலோ
மாதவிடாய் ஆனதுவே ஏலேலம்படி ஏலோ
தீட்டு தீட்டு என்று சொல்லி ஏலேலம்படி ஏலோ
ஒதுக்கி வச்சு ஒடுக்குனாங்க ஏலேலம்படி ஏலோ
என்று தொடங்கும் அந்த கிராமியக் கணீர்க் குரலே
இந்த 38 நிமிட திரைபடத்தை ஒரே வரியில்
விளக்கிவிடுகிறது...

முதலில் பாமர மக்கள் தொடங்கி பாலபாரதி அவர்கள் வரை பெண்களின்
மாதவிடாய் பற்றிய புரிதலை பதிவு செய்யும் ஆவணப் படம்,
அடுத்து அது ஓர் உடலில் இயல்பாகநிகழக்கூடிய ஒர் நிகழ்வுதான் என்பதை
மருத்துவர்கள் மூலம் பாமரனுக்கும் புரியவக்கும் செயலை மிகக் கச்சிதமாக்ச்
செய்கிறது....

மாதவிடாய்க் காலங்களில் இச்சமூகம் பெண்களுக்கு என்னவெல்லாம்
செய்வதன்மூலம் ஒர் பெண் இந்நிகழ்வை ஓர் இயல்பான நிகழ்வாய்
எடுத்துக்கொள்வாள் என்பதற்கான வழிகளையும் மிகத் தெளிவாக
விளக்குகிறது.

கல்வி, சுகாதாரம், பொருளாதாரம் இவற்றிலெல்லாம் மிகவும் பின்தங்கிய
அஸ்ஸாமில், ஒரு கோவிலில் மாதவிடாயை ஓர் தெய்வீக நிகழ்வாக
வழிபடுகிறார்கள் என்று ஆச்சரியப்படுத்தும் “மாதவிடாய்”...
மிகவும் முன்னெறிய மாநிலமென்று மார் தட்டிக்கொள்ளும் நமது
தமிழகத்தின் ஓர் கிராமத்தில் தனியாக ஓர் அறையே கட்டிவைத்து
ஒதுக்கி வைத்துள்ளதைத் தெரியப்படுத்தி அதிர்ச்சி அளிக்கவும்
தவறவில்லை...
 இது ஓர் குறும்படம் என்பது அளவில் மட்டும்தான்....
மற்றபடி ஓர் பெரும்படமாக சமூகத்தின் மற்ற அவலங்களுக்கும்
சாட்டையடி கொடுக்கவும் தவறவில்லை....

ஆண்டாண்டு காலங்களாய் தலித்துகள் மட்டுமே துப்புறவுப் பணியைச்
செய்ய்ம்படி ஈடுபட வைத்துள்ள சமூகத்தின் சாதீயக்கொடுமையைச்
சுட்டிகாட்டுகிறது...
 ‘மாற்றுத்திறனாளிகள் பொது இடங்களில் எப்படி இயற்கை
உபாதைகளைக் கழிப்பார்கள்? அதற்கான ஏற்பாடுகளை ஏன் இன்னும்
நாம் மேற்கொள்ளவில்லை? என்ற கேள்விகளை வேதனையோடு
வைக்கிறது இந்த “மாத்விடாய்.

முதலில் பெண்களுக்கே மாதவிடாய் என்பது அருவறுக்கத்தக்க
அசிங்கமான விஷயமல்ல என்பதை அழுத்தந்திருத்தமாக தெளிய வைத்து...

முத்லில் "இது பெண்களுக்கான பெண்களின் படம்" என்பதையும்....

தம் உயிரின் பாதியான பெண்களின் மிக நுட்பமான ஓர் இயற்கை
நிகழ்வை ஆண்கள் இதுவரை சரியாக உணர்ந்துகொள்ளவே இல்லை
என்று அவர்களுக்கு அன்பாய் உணர்த்தி,
இது ஆண்களுக்கான பெண்களின் படம் என்பதையும்...

“மாதவிடாய் நிகழ்வு இயல்பான ஒன்றாக எடுத்துக்கொள்ளப்பட
வேண்டுமென்றால் பெண்களுக்கு உளவியல் ரீதியாக உறுதுணையாக
இருப்பதோடு, பொது இடங்களில் கழிவறைகளில சானிட்டரி நாப்கின்களை
(Sanitary Napkins) அப்புறப்படுத்துவதற்கான வசதிகளை ஓர் சமூகம்
செய்து தரவேண்டும் என்ற தீர்வை முன்வைப்பதில்,
“இது சமூகத்திற்கான பெண்களின்படம்” என்பதையும் நிரூபிக்கிறது
இந்த “மாதவிடாய்”....


“ஒரு சிறு பொறிதான் காட்டையே அழிக்கும் என்பார்கள்...
 திருமதி. கீதா இளங்கோவன் அவர்களின் இந்த “மாதவிடாய் என்ற பெயர் கொண்ட
இச்சிறு பொறி, மாதவிடாய் பற்றிய சமூகத்தில் நிகழும் மூடநம்பிக்கைக் காட்டினை
அழிக்கவேண்டுமென்றால் சமூக நலன்பால் காதல் கொண்ட நாம் அனைவரும்
இந்தப் பொறியை (இதிரைப்பட DVD-ஐவீடுதோறும், தெருக்கள்தோறும்,
தேசந்தோறும் எடுத்துச் செல்வதே... 
அந்த மாபெரும் படைப்பாளிக்கு நாம் செலுத்தும் மரியாதை மட்டுமல்ல...
நம்மைச் சுமந்த பெண் குலத்திற்கேநாம் செய்யவேண்டிய சமூகக் கடமையும் கூட....
 “மங்கையராய்ப் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திட வேண்டுமம்மா – கவிமணி.
மாதவம் செய்து பிறந்த அந்த பெண்களின் மிக முக்கியமான உடலியல் நிகழ்வு
பற்றிய சமூக விழிப்புணர்வுக்கு “மாதவிடாய் என்ற இத்திரைப்படம் ஓர் “மாவரம்”. 
கால்ங்காலத்திற்குமான ஓர் ஆவணப்படத்தினை – ஓர் சமூகப் பொறியை படைத்த
திருமதி. கீதா இளங்கோவன் அவர்கள் தலையில் வைத்துக் கொண்டாடப்பட வேண்டியவர்கள்...
பெரியாரைப் போல.... 

எடுத்துக்கொண்ட “கரு” சிதைந்துவிடாமல்... அதனை நல்ல முறையில் சுகப்பிரசவமாக்கித் தந்த ஒளிப்பதிவாளர் “ஆஷிமா செனாய்ஒலிப்பதிவாளர் “ஆக்ருதி ராவ் மற்றும்
பட்த்தொகுப்பாளர் “பாபு” ஆகிய அனைவரையும் பாராட்டுவது மிகவும் அவசிய்மான ஒன்று..

தயாரிப்பாளர் திரு. இளங்கோவன் அவர்கள் தானுண்டு தனது ரயிலுண்டு
என வாளாவிருந்துவிடாமல், தன்சக தர்மினியின் உழைப்பிற்கு உறுதுணையாய்
இருந்தமைக்குக் கண்டிப்பாகப் பாராட்டப்படவேண்டியவராகிறார்.

திருமதி. கீதா இளங்கோவன் அவர்கள்...
காலங்காலமாய் பேச மறுக்கப்பட்ட
ஓர் இஸ்லாமிய சகோதரியைப் பேச வைத்திருக்கிறார்...
ஓர் மாற்றுத் திறனாளிப் பெண்ணைப் பேச வைத்திருக்கிறார்...
ஓர் குக்கிராமத்தில் வசிக்கும் பெண்ணையும் பேச வைத்திருக்கிறார்...

இனி உரக்கப் பேசவேண்டியது நம் சமூகம் மட்டுமே......

Dr. S.தெட்சினாமூர்த்தி,
மருத்துவ அலுவலர்,
அரசு ஆரம்ப சுகாதார நிலையம்,
திருப்புனவாசல்,
புதுக்கோட்டை மாவட்டம்.
திசைகள் மாணவ வழிகாட்டு அமைப்பு,அறந்தாங்கி. www.aranthai.com






Thursday, 14 February 2013

வாலென்டைன்ஸ் டேயும்... எனது விமானப் பயனமும்....


வாலென்டைன்ஸ் டேயும்... எனது விமானப் பயனமும்....



ஃபிப்ரவரி 14, 2009-ஆம் ஆண்டு புனேயிலிருந்து மும்பை வரை டொயோட்டா குவாலிஸில் பயனம் செய்து...

மும்பையிலிருந்து சென்னைக்கு ஒரு தனியார் விமானத்தில் (பெயர் வேண்டாம்) சென்னைக்கு மூன்று பேர் கொண்ட குழுவாகப் பயணம் செய்தோம்...

ஒரு தள்ளுவண்டியில் தண்ணீர், சாண்ட்விச், மற்றும் ஏதேதோ உணவுப் பொருட்களை விற்றுக்கொண்டு இரு அழகிய ஏர் ஹோஸ்டஸ் பெண்கள் சென்றனர்....

தண்ணீர் கூட பணம் கொடுத்து வாங்க வேண்டிய அவ்விமானத்தில்...

கடுப்புடன் கூடிய பயணம்....

அப்பொழுதுதான் ஒரு சிறிய நகைச்சுவை....

அடுத்த பத்து நிமிடங்களில் மீண்டும் ஒரு தள்ளுவண்டி...
இப்பொழுது உணவுப் பொருட்கள் அல்ல... பரிசுப்பொருட்கள்...

விமானப் பணிப்பெண்கள் கோரிய வசனம்...

"டூ யு வான்ட் டூ பை எனி கிஃ ப்ட் டூ யுவர் வாலென்டைன் சார்..?"

(உங்களுடைய வாலென்டைனுக்கு ஏதேனும் பரிசுப் பொருட்கள் வாங்க வேண்டுமா...?)

அடப் பாவிகளா....? 

வாலென்டைன்ஸ் டே என்றால் காதலர் தினம் என்று கூறுவதால் 

வாலென்டைன் என்பது காதலன் அல்லது காதலியின் பொதுப் பெயர் என்று எண்ணிய அப்பெண்களின் அறியாமையை எண்ணி மனதுக்குள் சிரித்துக்கொண்டே வந்தேன்....

Sunday, 10 February 2013

எங்க அக்கா பையன விஸ்வரூபம் பாக்க அழைச்சுக்கிட்டுப் போன கதை.... படிச்சுட்டு திட்டாதீங்க.... பிளீஸ்....


எங்க அக்கா பையன விஸ்வரூபம் பாக்க அழைச்சுக்கிட்டுப் போன கதை....
படிச்சுட்டு யாரும் 
திட்டாதீங்க.... பிளீஸ்....






நேத்து காலையில எங்க அக்கா பையன (இன்சினியரிங் ஸ்டூடன்ட்) கண்டிப்பா ஒன்ன விஸ்வரூபம் பாக்க அழைச்சுக்கிட்டுப் போறேன் அப்புடின்னு சொல்லிட்டு... வெளியில ஒரு வேலையா போயிட்டேன்...

திடீர்னு 4.30க்கு போன் செஞ்சு என்ன ஆச்சு அப்புடின்னு கேட்டான்...

அய்யனாரும் (Lecturer in AIHT) நம்ம கூட வர்றானாம்...
நங்கநல்லூர் போகலாம் அப்புடின்னு சொல்லி...

8.30 வரை நமக்கு டைம் இருக்கு அப்புடின்னும் சொல்லி....

நங்கநல்லூர் ராஜ ராஜேஸ்வரி கோவில், பக்கத்துல இருக்குற பெருமாள் கோவில், பாபா கோவில் எல்லாம் போனா...

மணி 8.35....

லேட்டாயிடுச்சே அப்புடின்னு எங்க அக்கா பையன் கேக்க...

9.00 மணி வரைக்கும் கவலைப்பட வேண்டாம்னு தைரியம் சொல்லி...

கரெக்டா 8.45 க்கு உள்ள நொளைஞ்சு...

நல்லா பாரு...

விஸ்வரூபம்...

ஆஞ்சநேயரோட விஸ்வரூபம்....

கன்னத்துல போட்டுக்க...

என்று கூறி ஆஞ்சநேயர கும்புட்டுட்டு....

வீட்டுக்கு வந்துட்டோம்....

அவ்வளவுதான்..

ஆனா எங்க அக்கா பையன் திட்டிக்கிட்டே வர்றான்....

நமக்கு இதெல்லாம் ஒரு பெரிய விஷயமா என்ன....?

என்றும் அன்புடன்,
சு.ஜெயக்குமார் 

முக்கியக் குறிப்பு:



இன்று அவனுக்கும் எனது அண்ணனுக்கும் காசி தியேட்டரில் டிக்கெட் புக் செய்து விஸ்வரூபம் பார்த்துவிட்டு வந்துவிட்டார்கள்....

நான்தானுங்க டிக்கெட் புக் பண்ணிக் குடுத்தேன்...

Tuesday, 1 January 2013

சொந்தமா ஒரு கார்.........வாங்கணும்...

சொந்தமா ஒரு கார்.........வாங்கணும்...



கோவையில் படித்துகொண்டிருந்தபொழுது...
(GPT, கோயம்புத்தூர், 1999-ஆம் வருடம்...)

கல்லூரி முடிந்து... மாலையில் அவினாசி சாலையில் நடந்து CMC அல்லது ஹோப் காலேஜ் ரோடு நிறுத்தம் வரையோ...

அல்லது கொடீசியா பில்டிங் வரையோ நடந்து செல்வதை நானும்... சில நண்பர்களும் வழக்கமாகக் கொண்டிருந்தோம்...

அவ்வாறு நடக்கையில் சாலையோரங்களில் நிறுத்தப்பட்டிருக்கும் விதவிதமான கார்களின் கதவுகளில்... கண்ணாடிகளில்... முகம் பார்த்துக்கொண்டே செல்வோம்...

ஒரு நாள் நண்பன் பழனி கார்த்தி (தற்பொழுது Robert Bosch GmbH, கோவையில் பொறியாளர்), 

"நண்பா, படிச்சு முடிச்சதும்... காசு சம்பாதிச்சு சொந்தமா ஒரு..."

அவன் முடிக்கும் முன்னர் நான், "கார் வாங்கனுமா நண்பா...?"

பழனி கார்த்தி, "இல்ல நண்பா...கார் கண்ணாடி வாங்கணும்..."

நான், "படுபாவி..."

இப்பொழுதும் எங்கே காரை பார்த்தாலும்...

கார் கண்ணாடியும்... பழனி கார்த்தியும்தான் நினைவுக்கு வருகிறார்கள்...

கார்த்தி... ஹாப்பி நியூ இயர் நண்பா....


என்றும் அன்புடன்,
சு.ஜெயக்குமார்