Wednesday, 26 December 2012

அப்புடி என்னங்க நான் தப்பா கேட்டுட்டேன்...? முருகா இது என்னப்பா எனக்கு வந்த சோதனை...?

அப்புடி என்னங்க  நான் தப்பா கேட்டுட்டேன்...?



முந்தா நாள் (கிருஸ்துமஸுக்கு முதல் நாள்) ஆபீஸ்ல இருந்து வீட்டுக்கு வந்தப்ப... (ஃபிரெண்டு பைக்ல பின்னாடி ஒக்காந்துக்கிட்டு...)

கத்திப்பாரா பாலம் உச்சியில இருக்குறப்போ... ரைட் சைடுல கைய்ய  காட்டி "ஜெகஜ்ஜோதியா இருக்கு பாருங்க ஜீ..."அப்புடின்னு பிரெண்டு சொல்ல... 

"ஜோதி தியேட்டர சொல்லுறீங்களா ஜீ..? " அப்புடீன்னு அப்பாவியா நான் கேக்க...(சத்தியமா..லைட் எல்லாம் போட்டு பளிச்சுன்னு இருந்துச்சுங்க...)

லாங் சைலென்ஸ்........

பாலத்த விட்டு எறங்குனதும் பிரெண்டு சொல்லுறாரு...
"ஒருநாள் இல்லைன்னா ஒருநாள் ஒங்கள பாலத்துல இருந்து தள்ளிவிடலன்னா பாருங்க... எம்ப்பேர மாத்தி வச்சுக்குறேன்..." அப்புடீன்னு...

அப்புறம்தான் தெரிஞ்சது... அவரு கை காட்டி சொன்னது புனித தோமையார் மலையை (St. Thomas Mount) ...

இனிமே பாலத்த விட்டு எறங்குற வரைக்கும் எதுவும் பேசக்கூடாது...

அப்பத்தான் உசுர காப்பாத்திக்க முடியும் போல...?

முருகா இது என்னப்பா எனக்கு வந்த சோதனை...?

தப்பிக்க வேற வழியே இல்லையா...?

என்றும் அன்புடன்,
சு.ஜெயக்குமார் 



Wednesday, 12 December 2012

சே... யாருப்பா ஃப்ளோர்ல ink -க கொட்டுனது...? சுத்தமாஅறிவே இல்லப்பா...

சே... யாருப்பா ஃப்ளோர்ல  ink -க கொட்டுனது...?
சுத்தமாஅறிவே இல்லப்பா...





சிறு வயதிலிருந்தே எனக்கு ண் ண் பேனாக்களில் எழுதுவது மிகவும் பிடிக்கும்....

அதுவும் புது விதமான எந்த பேனா கண்ணில் பட்டால் (பால் பாயின்ட் & பவுண்டைன் இங்க்) வாங்கி எழுதிவிடுவேன்....

இத்தகைய ஒரு பேனா காதலனை வெறுப்பேற்றிய சம்பவம்...

திங்கள் கிழமை காலை... 9.00 மணி...

அலுவலகத்தில் எங்கள் இருக்கை இருக்குமிடத்திற்கு செல்லும் வழி முழுவதும் நீல நிற பேனா மை (இங்க்-ink) பரவலாகச் சிதறி இருந்தது...
இந்த வேலையை யார் செய்தது என்று யாருக்கும் தெரியவில்லை....

நிறைய பேனா பயன்படுத்தியதால் எனக்கு நன்றாகத் தெரிந்தது... அது Pilot Hi-Tecpoint 0.5 மைக்ரோடிப் பேனாவின்  (MICRO  TIP PEN ) இங்க் என்பது...
இன்னும் கொஞ்ச நேரத்திற்குள் அதனை சுத்தம் செய்யாவிட்டால் அதன் கறை எக்காலத்திலும் விடாது என்பதும் எனக்குப் புரிந்தது...

எங்கள் அலுவலகத்தில் எனது இடம் அமைந்துள்ள இடம் நான்கு பேர் அடங்கிய ஒரு கேபின் போன்ற அமைப்பாக இருக்கும்...

எனக்குப் பக்கவாட்டில் ஒருவர்.... எங்கள் இருவருக்கும் பின்புறம் எங்களுடன் காய் விட்டு சண்டை போட்டதுபோல் முதுகைக் காட்டிக்கொண்டு இருவர்....
ஆனால் மிகவும் ஒற்றுமையான கேபின்... அந்த இங்க் சம்பவம் நடக்கும் வரை...

தரையில் சிதறி இருந்த ink-கினை மிதித்துக்கொண்டு ஒருசிலர் நடந்து சென்றனர்....

9.05 மணி...

எங்கள் கேபின் நண்பர்கள் (மற்ற மூறு பேர்) வந்தனர்...

யாரு ஜீ இப்புடி ink-க கொட்டுனது.... என்று மூவரும் பதறியதும்தான் கவனித்தேன்....அதில் இருவரது இருக்கையின் கீழே வரை ink கொட்டி இருந்தது....

அதை கவனிக்காமல் காலால் பரவலாக இழுத்து விட்டு விட்டார்கள்...

உடனடியாக ஒரு நண்பர் மற்றவரைப் பார்த்து "நீதானே செஞ்சது?" என்று கேட்க... மற்றவர் "அது நான் கேக்க வேண்டியகேள்வி... நீ முந்திக்கிட்டியா..?" என்று பதிலிறுக்க...
இன்னும் ஒரு சிலர் வந்து மற்ற இருவரையும் என்கரேஜ் (ENCOURAGE) செய்ய சிறு சண்டை பெரிதாக மாறத் தொடங்கியது...

எனக்கு பயங்கர ஆத்திரம்.... சிறு குழந்தைகள் போல் இப்படியா ஒன்றும் இல்லாத விஷயத்திற்கு அடித்துக் கொள்வது என்று...

ink-கினை தாண்டிச் சென்று தரை சுத்தம் செய்யும் நபரை அழைத்துவரச் சென்றிருந்தேன்...
வந்து பார்த்தால் இருவரும் வெவ்வேறு திக்கில் பார்த்தவாறு அமர்ந்திருக்க இடையில் இடையில் திட்டிக்கொள்கிறார்கள்.... 

நானும் வெறுப்புடன் அமர்ந்திருந்தேன்... யார் சண்டை போட்டுக்கொண்டாலும் எனக்குப் பிடிக்காது....

10.30 மணி...
இங்க் சுத்தம் செய்யப்பட்டது.... சிறிதளவு கறை தெரிந்தது... அது நிச்சயமாகப் போகாது....

மாலை 3.00 மணி...

ஒரு மீட்டிங்....

எப்பொழுதும் எனது பக்கவாட்டிலுள்ள நண்பர் பின்னால் இருப்பவரிடம்தான் பேனா வாங்கி எழுதுவார்...

இப்பொழுதுதான் சண்டை ஆயிற்றே...

என்னிடம் வந்து "ஜெயக்குமார் ஜீ (அப்புடித்தான் கூப்புடுவாங்க...)... பேனா கொடுங்க..." என்று கேட்க....

பணியாயிருந்த நான் திரும்பி இவர்கள் சண்டையை முடிக்கும் உறுதியுடன்... "பேனா தர்றேன்... பட் ஒரு கண்டிஷன்...."

நண்பர், "என்ன... மறக்காம திருப்பிக் குடுக்கணுமா...?"

நான், "இல்ல ஜீ..."

நண்பர், "இவனோட பேசணுமா ..."

நான் "அதுவும் இல்ல ஜீ..." 

நண்பர், "அப்புறம் என்ன...?"

நான் "இல்ல ஜீ... பேனா சரியா எழுதலன்னா உதறக் கூடாது...

உடனடியாக... 

"டாய் ..." என்ற சப்தத்துடன் இருவரும் அடிக்க வருகிறார்கள்...

நீங்களே சொல்லுங்க... 
INK-க தரையில கொட்டுனா அது அவ்ளோ  பெரிய  தப்பா என்ன...?

Sunday, 9 December 2012

நேற்று நான் ஒரு நிகழ்ச்சிக்குப் போயிருந்தேன்... Madhavidaai (Menses)-Documentary release function மாதவிடாய்- ஆவணப்பட வெளியீட்டு விழா நிகழ்ச்சி


நேற்று நான் ஒரு நிகழ்ச்சிக்குப் போயிருந்தேன்...

Madhavidaai (Menses)-Documentary release function மாதவிடாய்- ஆவணப்பட வெளியீட்டு விழா நிகழ்ச்சி






பொதுவா சின்ன வயசுலேர்ந்தே ஃபோட்டோ, வீடியோ அப்புடின்னாலே எனக்கு ரொம்ப அலர்ஜி....

எங்க அக்காக்கள் மற்றும் அண்ணன்கள் திருமணங்களிலேயே விரல் விட்டு எண்ணிவிடும் அளவிற்குதான் புகைப்படங்களில் இடம் பெற்றிருப்பேன்....

(10 போட்டோவா? அப்புடின்னு கேக்கக் கூடாது....)

சற்றே தாமதமாகச் சென்றால் கடைசி வரிசையில் அமர்ந்துவிடலாம்.என்ற எண்ணத்தில் 11 மணிக்கு ஹால் உள்ளே சென்றேன்...

இனி நிகழ்ச்சியில் நிகழ்நதவை....

நான் உள்ளே சென்ற நேரத்தில் இளங்கோவன் பாலகிருஷ்ணன் அவர்கள் பேசிக்கொண்டிருந்தார் (மென்மையான குரல்)...
ஒவ்வொருவரையும் அவர் வரவேற்றுக் கொண்டிருந்தார்...
மேடையில் நான் பார்க்க விரும்பிய முக்கியப் பெண்மணி "பால பாரதி" அவர்கள் இல்லை....
காரணம் முன்னரே கூறப் பட்டிருக்க வேண்டும்....

(லேட்டா போனதுமில்லாம பேசுறதப் பாரு....)

பின்னர் திரு.பிரபாகரன் அவர்கள்  பேச வரும் ஒவ்வொருவரையும் அறிமுகப்படுத்தி வைத்ததோடு அல்லாமல் அவர்களை பற்றிய விளக்கமான ஒரு சிறு உரையே நிகழ்த்திக் கொண்டிருந்தார் (அருமை... பாராட்டுக்கள்...)

ஆங்கிலத்தில் பேசிய திரு. K. ரவீந்திரன் அவர்களும் மிக நன்றாகவே வாழ்த்திப் பேசினார்....

மருத்துவர். தமிழிசை சௌந்தர்ராஜன் அவர்கள் தனக்கே உரிய நகைசசுவை பாணியில் மிகச் சிறப்பாகப் பேசினார்....

அவருடைய பேச்சின் இறுதியில் எப்பொழுதோ வந்திருக்க வேண்டிய திரைப்படமிது....உங்கள் மூலம் இப்பொழுதாவது வந்தததே என்று கூறியது அருமை...
(இளங்கோவன் சார் ஒங்க ரயில்வே துறை பற்றிய ஜோக் மிகவும் அருமை.... பழைய ஜோக்குன்னாலும் சூப்பர்...)

நான் மிகவும் மதிக்கும் திரு. மாலன் அவர்கள் பேசுகையில் பூபெய்தும் நிகழவை பல் விழும் நிகழ்வுடன் ஒப்பிட்டதும்....
பெண்கள் அடக்குமுறை என்பதை அடக்குமுறை அரசியலுடன் ஒப்பிட்டதும் மிகவும் அருமை....

ஆனால் அதற்கு முன்னர் பேசிய மருத்துவர். தமிழிசை சௌந்தர்ராஜன் அவர்கள் "பூபெய்தும் நிகழவைக் கொண்டாடும் மாநிலம் நம்முடையது " என்று பெருமையாக் குறிப்பிட...
திரு. மாலன் அவர்கள் பேசிய பொழுது கொண்டாடும் செயல் தவறென்று கூறியது மட்டுமே சிறிய் முரணாகத் தோன்றியது....

பின்னர் பேச வந்த சின்னப் பிள்ளை அவர்கள் மிக அருமையாகப் பேசினார்...
"எவ்வளவோ நாங்க செஞ்சுட்டோம்... இந்த ஒண்ணுதான் எங்களால ஒண்ணுமே செய்ய முடியாத் விஷயம்..
அத இவுங்க ச்சீத்தாவும், எளங்கோவும் செஞ்சுட்டாங்க...
அதுக்காக இங்க வந்த நீங்க அப்புடியே போகக் கூடாது...
ஒவ்வொருத்தரும் இதக் கையிலக் கொண்டுபோகணும்...
கொண்டு போயி மத்தவங்களுக்கும் தெரிய வைக்கணும்...
அதான் பாயிண்டு..."
என்று சின்னப் பிள்ளை அவர்கள் பேசிட பலத்த கைத்தட்டல்கள்..

பின்னர் படம் திரையிடப்படத் தொடங்க...
முதலில் ஆடியோ வரவில்லை...
அப்பொழுது எனக்கே பதறியது... (கடவுளே எந்த ப்ராப்ளமும் வரக்கூடாது...)

 உடனடியாக ஆடியோ சரியாகி திரைப்படம் ஓடத்தொடங்க....

38 நிமிடங்கள் அங்கு அனைவரும் கட்டுண்டு கிடந்தனர்...

அருமை... Remarkeable....Very Nice Presentation...

திரைப்படம் முடிநததும் விருந்தினர்கள் கிளம்பிட நானும் கிளம்பவேண்டிய ஒரு சூழ்நிலை...
எனது நண்பர் ஒருவரால்...
"இன்னைக்கி மட்டும் EXTERNAL HARD DISC வாங்கி குடுக்கலன்னா நீ யாரோ... நான் யாரோ" என்ற நண்பரொருவரின் மிரட்டலுக்குப் பயந்து கிளம்பிட...

லிப்ட் அருகில் இளங்கோவன் பாலகிருஷ்ணன் அவர்கள் நின்றிருந்தார்...
அவரிடம், "Excuse me சார் ஐ ஆம் ஜெயக்குமார் சுப்ரமணியன், ஃபேஸ்புக்" என்று கூறிட...
"நல்லா இருக்கீங்களா (?!?!?!)" என்று கேட்டார்...
(கண்டிப்பா நான் யாருன்னு தெரிஞ்சுருக்காது... இது தேவையா ஒனக்கு...?)

பின்னர் ரிச் ஸ்ட்ரீட் சென்று  நண்பனுக்கு EXTERNAL HARD DISC மற்றும் 3G டாங்கில் வாங்கிக் கொடுத்து....
நட்பினைக் காப்பாற்றிக்கொண்டேன்...

இப்படியாக ஒரு சனிக்கிழமை இனிதே முடிந்தது...

என்றும் அன்புடன்,
சு.ஜெயக்குமார்
நன்றி: 
இளங்கோவன் பாலகிருஷ்ணன் (http://www.facebook.com/ilangovan.balakrishnan.1?fref=ts)