நேற்று நான் ஒரு நிகழ்ச்சிக்குப் போயிருந்தேன்...
Madhavidaai (Menses)-Documentary release function மாதவிடாய்- ஆவணப்பட வெளியீட்டு விழா நிகழ்ச்சி
பொதுவா சின்ன வயசுலேர்ந்தே ஃபோட்டோ, வீடியோ அப்புடின்னாலே எனக்கு ரொம்ப அலர்ஜி....
எங்க அக்காக்கள் மற்றும் அண்ணன்கள் திருமணங்களிலேயே விரல் விட்டு எண்ணிவிடும் அளவிற்குதான் புகைப்படங்களில் இடம் பெற்றிருப்பேன்....
(10 ஃபோட்டோவா? அப்புடின்னு கேக்கக் கூடாது....)
சற்றே தாமதமாகச் சென்றால் கடைசி வரிசையில் அமர்ந்துவிடலாம்.என்ற எண்ணத்தில் 11 மணிக்கு ஹால் உள்ளே சென்றேன்...
இனி நிகழ்ச்சியில் நிகழ்நதவை....
நான் உள்ளே சென்ற நேரத்தில் இளங்கோவன் பாலகிருஷ்ணன் அவர்கள் பேசிக்கொண்டிருந்தார் (மென்மையான குரல்)...
ஒவ்வொருவரையும் அவர் வரவேற்றுக் கொண்டிருந்தார்...
மேடையில் நான் பார்க்க விரும்பிய முக்கியப் பெண்மணி "பால பாரதி" அவர்கள் இல்லை....
காரணம் முன்னரே கூறப் பட்டிருக்க வேண்டும்....
(லேட்டா போனதுமில்லாம பேசுறதப் பாரு....)
பின்னர் திரு.பிரபாகரன் அவர்கள் பேச வரும் ஒவ்வொருவரையும் அறிமுகப்படுத்தி வைத்ததோடு அல்லாமல் அவர்களை பற்றிய விளக்கமான ஒரு சிறு உரையே நிகழ்த்திக் கொண்டிருந்தார் (அருமை... பாராட்டுக்கள்...)
ஆங்கிலத்தில் பேசிய திரு. K. ரவீந்திரன் அவர்களும் மிக நன்றாகவே வாழ்த்திப் பேசினார்....
மருத்துவர். தமிழிசை சௌந்தர்ராஜன் அவர்கள் தனக்கே உரிய நகைசசுவை பாணியில் மிகச் சிறப்பாகப் பேசினார்....
அவருடைய பேச்சின் இறுதியில் எப்பொழுதோ வந்திருக்க வேண்டிய திரைப்படமிது....உங்கள் மூலம் இப்பொழுதாவது வந்தததே என்று கூறியது அருமை...
(இளங்கோவன் சார் ஒங்க ரயில்வே துறை பற்றிய ஜோக் மிகவும் அருமை.... பழைய ஜோக்குன்னாலும் சூப்பர்...)
நான் மிகவும் மதிக்கும் திரு. மாலன் அவர்கள் பேசுகையில் பூபெய்தும் நிகழவை பல் விழும் நிகழ்வுடன் ஒப்பிட்டதும்....
பெண்கள் அடக்குமுறை என்பதை அடக்குமுறை அரசியலுடன் ஒப்பிட்டதும் மிகவும் அருமை....
ஆனால் அதற்கு முன்னர் பேசிய மருத்துவர். தமிழிசை சௌந்தர்ராஜன் அவர்கள் "பூபெய்தும் நிகழவைக் கொண்டாடும் மாநிலம் நம்முடையது " என்று பெருமையாக் குறிப்பிட...
திரு. மாலன் அவர்கள் பேசிய பொழுது கொண்டாடும் செயல் தவறென்று கூறியது மட்டுமே சிறிய் முரணாகத் தோன்றியது....
பின்னர் பேச வந்த சின்னப் பிள்ளை அவர்கள் மிக அருமையாகப் பேசினார்...
"எவ்வளவோ நாங்க செஞ்சுட்டோம்... இந்த ஒண்ணுதான் எங்களால ஒண்ணுமே செய்ய முடியாத் விஷயம்..
அத இவுங்க ச்சீத்தாவும், எளங்கோவும் செஞ்சுட்டாங்க...
அதுக்காக இங்க வந்த நீங்க அப்புடியே போகக் கூடாது...
ஒவ்வொருத்தரும் இதக் கையிலக் கொண்டுபோகணும்...
கொண்டு போயி மத்தவங்களுக்கும் தெரிய வைக்கணும்...
அதான் பாயிண்டு..."
என்று சின்னப் பிள்ளை அவர்கள் பேசிட பலத்த கைத்தட்டல்கள்..
பின்னர் படம் திரையிடப்படத் தொடங்க...
முதலில் ஆடியோ வரவில்லை...
அப்பொழுது எனக்கே பதறியது... (கடவுளே எந்த ப்ராப்ளமும் வரக்கூடாது...)
உடனடியாக ஆடியோ சரியாகி திரைப்படம் ஓடத்தொடங்க....
38 நிமிடங்கள் அங்கு அனைவரும் கட்டுண்டு கிடந்தனர்...
அருமை... Remarkeable....Very Nice Presentation...
திரைப்படம் முடிநததும் விருந்தினர்கள் கிளம்பிட நானும் கிளம்பவேண்டிய ஒரு சூழ்நிலை...
எனது நண்பர் ஒருவரால்...
"இன்னைக்கி மட்டும் EXTERNAL HARD DISC வாங்கி குடுக்கலன்னா நீ யாரோ... நான் யாரோ" என்ற நண்பரொருவரின் மிரட்டலுக்குப் பயந்து கிளம்பிட...
லிப்ட் அருகில் இளங்கோவன் பாலகிருஷ்ணன் அவர்கள் நின்றிருந்தார்...
அவரிடம், "Excuse me சார் ஐ ஆம் ஜெயக்குமார் சுப்ரமணியன், ஃபேஸ்புக்" என்று கூறிட...
"நல்லா இருக்கீங்களா (?!?!?!)" என்று கேட்டார்...
(கண்டிப்பா நான் யாருன்னு தெரிஞ்சுருக்காது... இது தேவையா ஒனக்கு...?)
பின்னர் ரிச் ஸ்ட்ரீட் சென்று நண்பனுக்கு EXTERNAL HARD DISC மற்றும் 3G டாங்கில் வாங்கிக் கொடுத்து....
நட்பினைக் காப்பாற்றிக்கொண்டேன்...
இப்படியாக ஒரு சனிக்கிழமை இனிதே முடிந்தது...
என்றும் அன்புடன்,
சு.ஜெயக்குமார்
நன்றி:
இளங்கோவன் பாலகிருஷ்ணன் (http://www.facebook.com/ilangovan.balakrishnan.1?fref=ts)

உங்க படத்தைக்கானோம்...ஹி ஹி
ReplyDelete@ கோவை நேரம்:
Delete'நமக்கு போட்டோ, வீடியோ அப்புடின்னாலே ரொம்ப அலர்ஜி....
அதான் கடைசியில தலைமறைவா ஒக்காந்துட்டு ஓடிவந்துட்டேனுங்கோ...."