Wednesday, 12 December 2012

சே... யாருப்பா ஃப்ளோர்ல ink -க கொட்டுனது...? சுத்தமாஅறிவே இல்லப்பா...

சே... யாருப்பா ஃப்ளோர்ல  ink -க கொட்டுனது...?
சுத்தமாஅறிவே இல்லப்பா...





சிறு வயதிலிருந்தே எனக்கு ண் ண் பேனாக்களில் எழுதுவது மிகவும் பிடிக்கும்....

அதுவும் புது விதமான எந்த பேனா கண்ணில் பட்டால் (பால் பாயின்ட் & பவுண்டைன் இங்க்) வாங்கி எழுதிவிடுவேன்....

இத்தகைய ஒரு பேனா காதலனை வெறுப்பேற்றிய சம்பவம்...

திங்கள் கிழமை காலை... 9.00 மணி...

அலுவலகத்தில் எங்கள் இருக்கை இருக்குமிடத்திற்கு செல்லும் வழி முழுவதும் நீல நிற பேனா மை (இங்க்-ink) பரவலாகச் சிதறி இருந்தது...
இந்த வேலையை யார் செய்தது என்று யாருக்கும் தெரியவில்லை....

நிறைய பேனா பயன்படுத்தியதால் எனக்கு நன்றாகத் தெரிந்தது... அது Pilot Hi-Tecpoint 0.5 மைக்ரோடிப் பேனாவின்  (MICRO  TIP PEN ) இங்க் என்பது...
இன்னும் கொஞ்ச நேரத்திற்குள் அதனை சுத்தம் செய்யாவிட்டால் அதன் கறை எக்காலத்திலும் விடாது என்பதும் எனக்குப் புரிந்தது...

எங்கள் அலுவலகத்தில் எனது இடம் அமைந்துள்ள இடம் நான்கு பேர் அடங்கிய ஒரு கேபின் போன்ற அமைப்பாக இருக்கும்...

எனக்குப் பக்கவாட்டில் ஒருவர்.... எங்கள் இருவருக்கும் பின்புறம் எங்களுடன் காய் விட்டு சண்டை போட்டதுபோல் முதுகைக் காட்டிக்கொண்டு இருவர்....
ஆனால் மிகவும் ஒற்றுமையான கேபின்... அந்த இங்க் சம்பவம் நடக்கும் வரை...

தரையில் சிதறி இருந்த ink-கினை மிதித்துக்கொண்டு ஒருசிலர் நடந்து சென்றனர்....

9.05 மணி...

எங்கள் கேபின் நண்பர்கள் (மற்ற மூறு பேர்) வந்தனர்...

யாரு ஜீ இப்புடி ink-க கொட்டுனது.... என்று மூவரும் பதறியதும்தான் கவனித்தேன்....அதில் இருவரது இருக்கையின் கீழே வரை ink கொட்டி இருந்தது....

அதை கவனிக்காமல் காலால் பரவலாக இழுத்து விட்டு விட்டார்கள்...

உடனடியாக ஒரு நண்பர் மற்றவரைப் பார்த்து "நீதானே செஞ்சது?" என்று கேட்க... மற்றவர் "அது நான் கேக்க வேண்டியகேள்வி... நீ முந்திக்கிட்டியா..?" என்று பதிலிறுக்க...
இன்னும் ஒரு சிலர் வந்து மற்ற இருவரையும் என்கரேஜ் (ENCOURAGE) செய்ய சிறு சண்டை பெரிதாக மாறத் தொடங்கியது...

எனக்கு பயங்கர ஆத்திரம்.... சிறு குழந்தைகள் போல் இப்படியா ஒன்றும் இல்லாத விஷயத்திற்கு அடித்துக் கொள்வது என்று...

ink-கினை தாண்டிச் சென்று தரை சுத்தம் செய்யும் நபரை அழைத்துவரச் சென்றிருந்தேன்...
வந்து பார்த்தால் இருவரும் வெவ்வேறு திக்கில் பார்த்தவாறு அமர்ந்திருக்க இடையில் இடையில் திட்டிக்கொள்கிறார்கள்.... 

நானும் வெறுப்புடன் அமர்ந்திருந்தேன்... யார் சண்டை போட்டுக்கொண்டாலும் எனக்குப் பிடிக்காது....

10.30 மணி...
இங்க் சுத்தம் செய்யப்பட்டது.... சிறிதளவு கறை தெரிந்தது... அது நிச்சயமாகப் போகாது....

மாலை 3.00 மணி...

ஒரு மீட்டிங்....

எப்பொழுதும் எனது பக்கவாட்டிலுள்ள நண்பர் பின்னால் இருப்பவரிடம்தான் பேனா வாங்கி எழுதுவார்...

இப்பொழுதுதான் சண்டை ஆயிற்றே...

என்னிடம் வந்து "ஜெயக்குமார் ஜீ (அப்புடித்தான் கூப்புடுவாங்க...)... பேனா கொடுங்க..." என்று கேட்க....

பணியாயிருந்த நான் திரும்பி இவர்கள் சண்டையை முடிக்கும் உறுதியுடன்... "பேனா தர்றேன்... பட் ஒரு கண்டிஷன்...."

நண்பர், "என்ன... மறக்காம திருப்பிக் குடுக்கணுமா...?"

நான், "இல்ல ஜீ..."

நண்பர், "இவனோட பேசணுமா ..."

நான் "அதுவும் இல்ல ஜீ..." 

நண்பர், "அப்புறம் என்ன...?"

நான் "இல்ல ஜீ... பேனா சரியா எழுதலன்னா உதறக் கூடாது...

உடனடியாக... 

"டாய் ..." என்ற சப்தத்துடன் இருவரும் அடிக்க வருகிறார்கள்...

நீங்களே சொல்லுங்க... 
INK-க தரையில கொட்டுனா அது அவ்ளோ  பெரிய  தப்பா என்ன...?

No comments:

Post a Comment