அங்கிள்... அங்கிள்.... எங்கு சென்றாலும் துரத்தும் வார்த்தை....
(அதுனால என்ன இருந்துட்டு போகட்டுமே...)
2008-ஆம் வருடத்தில் ஒரு நாள்...
அப்பொழுது புனே-வில் வேலை செய்து கொண்டிருந்தேன்...
எனது அலுவலகம் சென்னையில்தான்....
ஆனால் மிஸ்டர் சிவா...அமெரிக்காவே ஒங்களத்தான் நம்பியிருக்கு.... என்று தமிழ்ப்படத்தில் கூறுவது போல....
நீங்க வந்தாதான் இந்த ப்ராஜெக்ட் செய்ய முடியும் (!!!) அப்புடின்னு ஹெட் ஆஃ பீசுல இருந்து சொன்னதும்...
நான் (அப்பொழுது வயது 27), மற்றொரு நண்பர் பகவதி (அப்பொழுது வயது 29) , எங்களுடைய டைரக்ட் பாஸ் செந்தில் குமார் (அப்பொழுது வயது 36) மற்றும் எங்களுடைய மேனேஜர் (அப்பொழுது வயது 38) ஆகிய ஒரு குழுவாக புனே சென்று ஒரு ஆறு மாத காலங்கள் பாவ் பாஜியும்... பாலக் பனீருமாகத் தின்று வந்தோம்....
நான் ஒரு இராக்கோழி மட்டுமல்ல அதிகாலையில் துயிலெழுபவனும் கூட...
எனவே காலையில் எழுந்து டீவியில் மூழ்கி விடாமல்... (டீவி பார்க்கும் வழக்கம் நிறுத்தப்பட்டு 5 ஆண்டுகள் கடந்துவிட்டன...)
காலையில் நடக்கலாமே என்று முடிவு செய்தேன்...
தனியா நடக்க முடியாதே... ஹிந்தி, மராத்தி தெரியாது...
நாய் தொரத்துனா கூட யாரையும் ஹெல்ப் கேக்க முடியாது....
என்ன பண்ணலாமென்று நன்கு யோசித்து...
சற்றே சற்று டயாபட்டீஸ் ஆரம்ப நிலையிலிருந்த எங்கள் மேனேஜரை அவரது அனுமதி இல்லாமலேயே...
அதிகாலையில் (5 மணிக்கு) எழுப்பி... புனே குளிரில் சொட்டர் இல்லாமல் (To enjoy the real climate !!!) வாக்கிங் செல்ல முடிவெடுத்து...
செயல் படுத்தவும் தொடங்கினேன்...
5 மணிக்கு அவரை எழுப்பி தர தர வென்று இழுத்துக்கொண்டு செல்கையில் எனக்கே பாவமாகதான் இருந்தது...
அதுக்காக விட்டுடலாமா... என்ன...?
முதலிரண்டு நாட்கள் கஷ்டமாக இருந்த அவருக்கும் அந்த வாக்கிங் பிடித்துவிட....
தினமும் ஒரு புது வழியில்... புதுப் புது திசையில் இருவரும் நடந்தோம்...
எனவே அங்கே பல இடங்கள் அத்துபடியாகிவிட்டன...
(ஆனா ஹிந்தியும் மராத்தியும் இன்னைக்கு வரைக்கும் தெரியாது...)
இப்பொழுது சம்பவத்திற்கு வருகிறேன்....
புனேயில் BHEL சௌக் என்றொரு இடமுண்டு...
நாங்கள் பணிபுரிந்தது THERMAX என்ற பாய்லர் கம்பெனி... எனவே அது இருக்குமிடத்திற்கு தெரமாக்ஸ்சௌக் என்று பெயர்...
அது போல BHEL கம்பெனி இங்க எங்கயோ இருக்கு சார் என்று நான் கூறிட... அவர் சிரித்து...
இங்க பேல் பூரி கடைங்க அதிகமா இருக்குற இடம் அதுனால இந்த எடத்துக்கு பேல் சௌக் அப்புடின்னு பேரு என்று கூறியதும் (I have got a Bulb) நடந்த இடம்....
ஒரு இனிய இரவு நேரம் (7.30 PM)...
நாங்கள் நால்வரும் சாப்பிட்டுவிட்டு பேல் சௌக் வழியாக நடந்துகொண்டிருக்கையில்
ஸ்கூட்டி ஒன்று எங்களருகில் வந்து நின்றது....
அதை ஓட்டி வந்த பதினைந்து பதினாறு வயதுள்ள ஒரு பள்ளி மாணவி,"அங்கிள்... MME ஸ்கூல் எங்கே இருக்கிறது"என்று மராத்தியில் கேட்க (கொஞ்சம் கொஞ்சம் புரியும்)...
மிக விளக்கமாக ஆங்கிலத்தில் அந்த இடத்திற்குச் செல்லும் வழியைக் கூறிக்கொண்டே பார்க்கிறேன்...
எங்கள் மேனேஜரும்... டைரக்ட் பாஸும் சடாரென ஏறக்குறைய ஓடிவிட்டார்கள்...
நண்பர் பகவதியும் ஒரு குறிப்பிட்ட தொலைவில் நின்று கொண்டிருந்தார்...
அப்பொழுதுதான் உணர்ந்தேன் அப்பெண் "அங்கிள்" என்று அழைத்ததினை...
அதன் பிறகு பலமுறை வெவேறு இடங்களில் சிறுவர்களும் சிறுமிகளும் இதே போல் அழைத்து ஏதேதோ கேட்ட பொழுதும் நின்று நிதானமாக அவர்களது கேள்விக்கு பதில் கூறினேன்...
"இத்தன பேரு இருக்குறோம்... ஆனா எல்லா எடத்துலயும் ஒங்க கிட்ட மட்டுமே எல்லாரும் அட்ரஸ் கேக்குறாங்க...
ஒருவேள ஒங்கள மராத்திக்காரர்னு நெனைச்சுட்டாங்க போல" என்று அனைவரும் கூறினார்கள்...
எனக்கு ஏன் அச்சொல் வித்தியாசமாகத் தோன்றவில்லை...
காரணம்...
என்னுடைய முதல் அக்கா என்னைவிட 12 வயது பெரியவர்...
அவருக்கு 20 வயதிற்குள் திருமணம் நிகழ்ந்துவிட்டது...
எனக்கு புனேவில் இச்சம்பவம் நிகழ்ந்தபொழுது எனது அக்கா மகனுக்கு 16 வயது....
பிறகெப்படி எனக்கு வித்தியாசமாகத் தோன்றும்...
அங்கிள்ன்னுதான கூப்புடுறாங்க...
அதுனால என்ன இருந்துட்டு போகட்டுமே...
நம்ம ஊருல காந்தித் தாத்தாவைவிட நேரு மாமாவதானே கொழந்தைங்களுக்கு ரொம்ப புடிக்கும்....
ஆனால் என்னுடன் வருபவர்கள் பாடுதான் பாவம்...
என்றும் அன்புடன்,
சு.ஜெயக்குமார்

தெளிவான நடை! சுவாரசியமான சங்கதிகள்! சிந்தையை கொள்ளை கொள்ளச் செய்வது இயல்பே!
ReplyDeleteதொடர்ந்து எழுதுங்கள் தோழரே!
அருமையா எழுதுறீங்க அங்கிள்
ReplyDelete