Wednesday, 26 December 2012

அப்புடி என்னங்க நான் தப்பா கேட்டுட்டேன்...? முருகா இது என்னப்பா எனக்கு வந்த சோதனை...?

அப்புடி என்னங்க  நான் தப்பா கேட்டுட்டேன்...?



முந்தா நாள் (கிருஸ்துமஸுக்கு முதல் நாள்) ஆபீஸ்ல இருந்து வீட்டுக்கு வந்தப்ப... (ஃபிரெண்டு பைக்ல பின்னாடி ஒக்காந்துக்கிட்டு...)

கத்திப்பாரா பாலம் உச்சியில இருக்குறப்போ... ரைட் சைடுல கைய்ய  காட்டி "ஜெகஜ்ஜோதியா இருக்கு பாருங்க ஜீ..."அப்புடின்னு பிரெண்டு சொல்ல... 

"ஜோதி தியேட்டர சொல்லுறீங்களா ஜீ..? " அப்புடீன்னு அப்பாவியா நான் கேக்க...(சத்தியமா..லைட் எல்லாம் போட்டு பளிச்சுன்னு இருந்துச்சுங்க...)

லாங் சைலென்ஸ்........

பாலத்த விட்டு எறங்குனதும் பிரெண்டு சொல்லுறாரு...
"ஒருநாள் இல்லைன்னா ஒருநாள் ஒங்கள பாலத்துல இருந்து தள்ளிவிடலன்னா பாருங்க... எம்ப்பேர மாத்தி வச்சுக்குறேன்..." அப்புடீன்னு...

அப்புறம்தான் தெரிஞ்சது... அவரு கை காட்டி சொன்னது புனித தோமையார் மலையை (St. Thomas Mount) ...

இனிமே பாலத்த விட்டு எறங்குற வரைக்கும் எதுவும் பேசக்கூடாது...

அப்பத்தான் உசுர காப்பாத்திக்க முடியும் போல...?

முருகா இது என்னப்பா எனக்கு வந்த சோதனை...?

தப்பிக்க வேற வழியே இல்லையா...?

என்றும் அன்புடன்,
சு.ஜெயக்குமார் 



3 comments:

  1. உண்டு. பேசாம நடந்து வீட்டுக்குப் போயிடுங்க.

    ReplyDelete
  2. இந்த வேர்டு வெரிபிகேஷன் கருமாந்தெரத்த எடுத்துடுங்க, உங்களுக்குப் புண்ணியமாப்போகட்டும்!

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சார்...
      கண்டிப்பா எடுத்துடுறேன்...

      Delete